தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிக்கப் போகிறீர்களா? அல்லது வெளியேறப் போகிறீர்களா? என இலங்கை தமிழ் அரசு கட்சியிடம் பங்காளிக்கட்சிகள் உத்தியோகபூர்வமாக கோரவுள்ளன.
நாளை இது குறித்து உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் கோருவார்கள் என தமிழ்பக்கம் அறிகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அல்லாமல், பிரிந்து சென்று போட்டியிட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மதிதிய செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சமர்ப்பிப்பதென, இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்று போட்டியிட தீர்மானித்துள்ளதையடுத்து, இலங்கை தமிழ் அரசு கட்சியிடம், விளக்கம் கோர பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடர போகிறீர்களா அல்லது வெளியேறப் போகிறீர்களா என எழுத்துமூலமாக நாளை விளக்கம் கோருவார்கள் என தெரிய வருகிறது.