வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் இன்று (07) மாலை செலுத்தப்பட்டது.
வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னனியின் வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வி.சந்திரலிங்கம் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் புதிதாக தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, ஜனநாயக இடதுசாரி முன்னனி முதல் முறையாக வவுனியா நகரசபையில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளோம். மக்கள் வருகின்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்களது அபிவிருத்திஇ ஊழலற்ற ஆட்சி என்பவற்றுக்காக மக்களது பொருளாதார நிலமைகளை கருத்தில் கொண்டு நாம் போட்டியிடுகின்றோம். இதன் மூலம் மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வி.சந்திரலிங்கம் தெரிவித்தார்.