25.4 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

வடமராட்சி கிழக்கில் தனித்து வாழ்ந்து வந்தவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (56) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் துர்நாற்றம் வீசியதாகவும், கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால், தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

Leave a Comment