இன்று காலை ஹங்வெல்ல பிரதேசத்தில் சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹங்வெல்ல உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். கொலையாளியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றதுடன், கொலைக்கு திட்டமிட்டவரே கைதாகினார்.
தற்போது டுபாயில் இருந்து செயற்படும் லலித் கன்னங்கர மற்றும் சாமியா என்றழைக்கப்படும் சமிந்த புத்திக ஆகியோரின் கட்டளைப்படி இந்த கொலை நடந்தது.
ஹன்வெல்ல குறுக்கு வீதியிலுள்ள உணவகத்தின் உரிமையாளர் மொஹமட் ஃபர்ஷான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1