காணி மோசடி வழக்கில் கைதான சட்டத்தரணியின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காணி மோசடி வழக்கில் கோண்டாவிலை சேர்ந்த சட்டத்தரணி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒரு காணி மோசடி வழக்கில் கைதானவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு காணி மோசடி வழக்கில் சிக்கி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1