28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (5) ஆரம்பமாகவுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 2023 ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர்கள், தபால் மற்றும் புகையிரத உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் ஆகியோர் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என ஆணையாளர் தெரிவித்தார்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான தேவைகளை www.elections.gov.lk அல்லது 1919ஐ தொடர்பு கொண்டு அணுகலாம்.

தபால் மூல வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும் – ருவன் செனரத் தகவல்

east tamil

3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

east tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை

east tamil

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

Leave a Comment