கதிர்காமம் மற்றும் கொழும்புக்கு இடையில் இயங்கும் அரை சொகுசு பஸ் சேவை இன்று (4) நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த பாதையில் வழமையான பஸ்கள் மற்றும் சொகுசு பஸ்கள் வழமையாக இயங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1