ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் திருமதி கனி விக்னராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1