தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தின் 5வது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் அவர்கள் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டை – தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது.
நிகழ்வின்போது சம்பிரதாயபூர்வ செயற்பாடுகள், வழிபாடுகள், பேராயர்களின் உரைகள், புதிய பேராயரை கௌரவிக்கும் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. அதனையடுத்து புதிய பேராயரை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பேராயர்கள், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நல்லை ஆதீனம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா, தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1