பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுதந்திரத்தை சிதைக்கும் வகையில் அரசியல் அதிகாரம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது வரலாற்றுப் பிழை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (2) தெரிவித்தார்.
நாட்டிற்கு சுதந்திரமான நிறுவனங்கள் தேவைப்படுகின்ற இவ்வேளையில், தற்போதுள்ள சுயாதீன நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்துவது நல்ல நிலைமையல்ல என்றார்.
மின் கட்டணத்தை உயர்த்தும் முறை குறித்து சட்டமா அதிபரிடம் தவறான விளக்கத்தை பெற்றதாகவும், அதற்கேற்ப மின் கட்டணத்தை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை மிகவும் அநீதியானது எனவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு எதிரானது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.