மீனம் ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் குரு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று விரைய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் ராசிக்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்
பலன்கள்: குருவை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிளாலர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள்.
தொழிலில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள். விவசாயிகளுக்குத் திருப்தியான சூழ்நிலை அமையும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார நிலையில் கணிசமான வளர்ச்சியை நிச்சயம் காணலாம். தொழில் சிறப்படையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரக்கூடிய நல்ல நேரம் இது.
அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்வு மேலும் மேலும் சிறப்படைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். கட்சித் தலைமை உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கும். அதை சிரத்தையுடன் செய்தால் உங்களுக்கான அங்கீகாரம் கட்சியில் கிடைக்க வாய்ப்புண்டு.
கலைத்துறைபணிகள் சரிவர நடக்கும். பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம் இது. நலம் பெருக வாய்ப்புண்டு. தொழில் சிறக்கும். உங்களை மிகவும் உயர்வான நிலைக்குக் கொண்டு செல்ல இந்த காலகட்டம் உதவும். கவுரவம் சிறப்பாக அமையும். புகழ், பொருள், எல்லாம் பெருகக் கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். தரும காரியங்களில் ஈடுபட்டு வந்தால் நலம் பெருகும். மனநலம், குடும்பநலம் அதிகமாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். தேவையான பணம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சிலருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாணவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொறியியல் துறையில் சாதனை புரியலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் புகழ் பெறுவார்கள். கணிதத்துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு குடும் நலம், மனநலம் இரண்டுமே சீராக அமையும். தகுதிவாய்ந்த அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இடமுண்டு. கலைத்துறை பணிகள் சிறப்படையும். குடும்ப நலம் பெருகும். ஏழைகளுக்கு உதவுங்கள், தெய்வப்பணிகளில் ஈடுபடுங்கள். கணிதத்துறை வல்லுநர்கள், மருத்துவத்துறை மேலோர்கள், விவசாயத்துறை விற்பனர்கள், வியாபாரத் துறை சமர்த்தர்கள் அனைவரும் பாராட்டு பெற வாய்ப்பு பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: இந்த ஆண்டு எல்லாம் விருத்தியாகும். தொழில் சிறப்படையும். முதலாளி – தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். பணவரவு சீராக அமையும். வெளிப்படையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். மற்றவர்கள் பாராட்டத்தக்க வகையில் உங்கள் வேலை அமைந்திருக்கும். வீரியமுடன் காரியங்ளைச் செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரேவதி: இந்த ஆண்டு வீடு, மனை வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் சரியாகி புது வீடு கட்டுவீர்கள். பணப்பிரச்சினைகள் தீர்ந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் திறமைகள் பல வழிகளிலும் வெளிப்படும். உங்கள் வேலை நுணுக்கத்தை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி சந்தோஷமான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
ஏனைய ராசிகளின் பலன்கள்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்