24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

தெல்லிப்பளை பிரதேச செயலக கிராமசேவகர்கள் போராட்டம்!

இன்றையதினம், தெல்லிப்பளை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பளை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை தெல்லிப்பளை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சமாதான அலுவலர், சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?, இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு, எங்கள் சேவைக்கு பாதுகாப்பு இல்லையா?, அலுவலகத்தை சேதமாக்கியோரை கைது செய், தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

Leave a Comment