27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

மின்கட்டணத்தை அதிகரித்தே தீர வேண்டும்: அமைச்சர் விடாப்பிடி!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் சில மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு மக்கள் பழக வேண்டியிருக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மொத்த மின்சாரத் தேவையில் 25 வீதத்தை தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து திரட்டி வெட்டுக்கள் இன்றி தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் துறை டீசல் மற்றும் நாப்தா மின் உற்பத்தி நிலையங்களில் 12 சதவீதமும், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களில் 13 சதவீதமும் கொள்முதல் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

இல்லாவிட்டால், வரியை அதிகரிப்பது, பணம் அச்சடிப்பது அல்லது மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பது தவிர பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறு வழியில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய மின்கட்டணத்தை அதிகரிப்பது மின்சார சபையின் கடந்தகால நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக அல்ல என்றும், 2023ஆம் ஆண்டு மின்சார உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செலவீனத்தில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். .

முன்மொழிவுகளின்படி, 2023 இல் தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தேவையான மின்சாரம் திறன் முழுமைய ஒரு யூனிட் விலை 48.42 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தில், ஒரு மின்சார அலகு ஒன்றின் விலை 29.14 ரூபாவாகக் கணக்கிடப்பட்டதாகவும், இதனால் 2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குவதில் சுமார் 78 பில்லியன் ரூபா நிதிப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மழைக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றிய அறிக்கைகள் திணைக்களத்தால் இதுவரை வழங்கப்படாததால், சாதாரண மழை பெய்யும் என கணக்கிட்டு புதிய விலைக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நல்ல மழை பெய்தால், ஜூலையில் செய்யப்படும் விலை திருத்தத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும் என்றார்.

இதுவரையில் அமுல்படுத்தப்பட்ட மின்வெட்டு காலத்தில் எப்படியும் மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் கூறியதாகவும், மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இன்னும் பல மணிநேரம் இருளில் இருக்க நாம் அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அமைச்சர் நிலக்கரி நெருக்கடி தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.

கடந்த செப்டெம்பர் மாதம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு 180 நாட்கள் கால அவகாசத்துடன் நிலக்கரியை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட டெண்டர் ஓமல்பே சோபிதவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையினால் இரத்துச் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

நிலக்கரி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து, அவர் வழக்கு தொடர்ந்ததாக  குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் ரீதியாக அனைத்து விடயங்களுக்காகவும் குரல் எழுப்பும் தேரரை தான் இதுவரை பார்த்ததில்லை எனவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

Leave a Comment