வியட்நாமில் தங்கியிருந்த 152 இலங்கையர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வியட்நாமின் ஹோசிமின் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
கப்பல் மூலம் கனடாவிற்கு செல்ல முயன்ற 303 இலங்கையர்கள், யப்பான் நாட்டு கப்பலால் காப்பாற்றப்பட்டு, வியட்நாமில் கரை சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் வியட்நாமில் தங்கியிருந்த நிலையில், 152 பேர் சுய விருப்பில் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1