25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணம் வந்த லொறி மோதி இருவர் பலி!

பாதெனிய அனுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவ, மஹகல்கடவல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான தேஷான் மலிந்த மற்றும் கல்கமுவ, களுந்தேவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியொன்றும் தலாவயிலிருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் தம்புத்தேகம கொன்வெவ பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரபல சோப்பு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் நால்வர் தமது பணியை முடித்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த மற்றைய இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Pagetamil

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு

Pagetamil

அனுர அரசுக்கு யாழில் எச்சரிக்கை விடுத்த பட்டதாரிகள்!

Pagetamil

Leave a Comment