Pagetamil
ஆன்மிகம்

2023 புத்தாண்டு ராசிபலன்கள் எப்படி?: சிம்மம் ராசி

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று சப்தம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்

பலன்கள்: சூரியனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு புதுமுயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி முகம் காண்பதற்குரிய சூழ்நிலையும் கனிந்து வரும். பொருளாதார சுபிட்சம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தாம்பத்திய சுகம் நல்ல விதமாக அமையும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடமுண்டு. உங்களுடைய அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகளை தேவையறிந்து செய்யவும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியும் வரலாம். பயணத் தைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினை உருவாக வாய்ப்பில்லை. ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றம் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் – தொழிலாளர்களுக்கும் நல்லிணக்கம் உண்டாகி ஸ்தாபன வளர்ச்சி இருக்கும்.

வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். மருத்துவர்களுக்கு நல்ல செல்வாக்கு உருவாகும். இயந்திரப்பணி தான் சற்று சிக்கல் தரும். மிகுந்த அலைச்சல் உண்டாகும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலைகளை முடிப்பதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். அரசாங்க காரியங்களும் துரிதமுடன் நடைபெற வாய்ப்புண்டு. உடல்நலம், குடும்பநலம் பொருளாதார நலம் எல்லாமே சிறப்பாக அமையும். சில தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படவும் வாய்ப்புண்டு.

கலைத்துறை நல்ல விதமாக அமையும். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப் படுவர். கணிசமான பொருள் பாக்கியமும் பெற இடமுண்டு. பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சமும் சீராகவே இருக்கும்.

பெண்களுக்கு உற்றார் உறவினர் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டு. குறிப்பாக திருமண ஏற்பாடு கைகூடி வர வாய்ப்புண்டு. பெற்றோரால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் நலம் காண்பர். மாணவர்களுக்கு ஆசிரியர் உறவு மகோன்னதமாக விளங்கும். கல்விப் பயனைப் பெறுவதில் இடையூறு இருக்கலாம். எனினும் அதனை சிறப்பாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்.

மகம்: இந்த ஆண்டு சற்று சுறுசுறுப்பு குறையலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டாகலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் இருந்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வளர்ச்சி இருக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வீடு, நிலம் போன்ற இனங்களில் வழக்கு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயல்வது நல்லது. இயந்திரத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ஏற்றம் உண்டாகும்.

பூரம்: இந்த ஆண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விவசாயிகளுக்கு உற்சாகமாக இருக்கும். கொடுக்கல் – வாங்கல் திருப்தி தரும். நில புலன்களில் ஆதாயம் காணலாம். வியாபாரிகளுக்கு அளவான லாபம் இருக்கும். கவலை வேண்டாம். மகிழ்ச்சி உண்டு, கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் ஏற்றம் பெறுவர். கலைத்துறையினருக்கு சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிட்டும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் வருவதற்கு கிரக அமைப்பு உதவக்கூடும். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. வழக்குகளில் வெற்றி வாய்ப்பு பெறவும் ஆதாய சூழ்நிலை உண்டு. இயந்திரப்பணி புரிவோருக்கு ஒரு சிக்கல் உருவாகலாம். இரும்பு, பித்தளை போன்ற உலோகத்
தொடர்புடையவர்களுக்கு ஓரிரு பிரச்சினைகள் உருவாகலாம். சனி பகவானைத் தொழுது வந்தால் தொல்லை குறையும்.

பரிகாரம்: ஞாயிறுதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

ஏனைய ராசிகளின் பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!

Pagetamil

கும்பம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!

Pagetamil

மகரம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!

Pagetamil

தனுசு: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!

Pagetamil

விருச்சிகம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!