புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவில் வீதியில் சென்று கொண்டிருந்த மாணவியை இளைஞன் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் (25) மாணவி புத்தளம் நகருக்குச் சென்று தனது காதலன் எனக் கூறிக்கொள்ளும் இளைஞனைச் சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஆட்களற்ற பகுதியில் இனந்தெரியாத இளைஞன் ஒருவன் மாணவியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, மாணவி அணிந்திருந்த தோடுகளை கழற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
மாணவி இது குறித்து தனது தாயாரிடம் கூறியதாகவும், தாயும் மகளும் முந்தல் பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாணவி பலாத்காரத்திற்குள்ளானதாக பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.