கொள்ளுப்பிட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக சமூக ஆர்வலர்களான அனுருத்த பண்டார மற்றும் தனிஷ் அலி ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், அவர்கள் இன்று (27) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.