27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
சினிமா

காதலிப்பதாக கூறி 4 மாதம் உல்லாசம்; வயது வித்தியாசத்தை கூறி பிரிந்த காதலன்: 15 நாளில் நடிகை தற்கொலை!

ஷ்ரத்தா வாக்கர் வழக்கு தங்கள் காதல் முறிவுக்கு காரணம் என நடிகை துனீஷா ஷர்மாவின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தி மொழி டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமாகி வந்தவர் இளம் நடிகை துனீஷா சர்மா. 20 வயதான இவர் தற்போது ‘அலிபாபா தஸ்தான் இ-காபூல்’ என்ற டி.வி. தொடரில் நடித்து வந்தார். இதற்கான படப்பிடிப்பு மும்பையை அடுத்த வசாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது.

கடந்த சனிக்கிழமை படப்பிடிப்பின் இடைவேளையின் போது, நடிகை துனீஷா அங்குள்ள மேக்அப் அறையின் குளியலறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த படக்குழுவினர், கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது நடிகை துனீஷா தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

உடனடியாக படக்குழுவினர் அவரை மரௌத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை செய்த நடிகை துனீஷா தனது 13வது வயதில் ‘பாரத் கா வீர் புத்ரா, மகாராணா பிரதாப்’ என்ற தொடரில் நடித்துள்ளார். இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, சக்ரவர்த்தி அசோகா சாம்ராட் உள்ளிட்ட டிவி தொடர்களிலும், பிதூர், பார் பார் தேகோ, தபாங் -3 போன்ற இந்திப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமாகி வந்த நடிகை துனீஷா திடீரென உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகை துனீஷா தற்கொலைக்கு முன்பு கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துனீஷாவும், உடன் நடித்து வந்த டி.வி. நடிகர் ஷீஷன் கான் என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களாகவே துனிஷா படப்பிடிப்பு தளத்தில் சோகமாகவே காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே துனீஷாவின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது மகள் தற்கொலைக்கு காதலன் ஷீஷன் கான் தான் காரணம் என கூறியிருந்தார். 15 நாட்களுக்கு முன் இவர்களிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வாலிவ் போலீசார் நடிகை துனீஷாவின் காதலன் ஷீஷன் கானை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகர் ஷீஜன் கான், ‘ஜோதா அக்பர்’ படத்தில் இளம் வயது அக்பராக நடித்தவர். பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள இவர், துனீஷாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்களில் சிக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

விசாரணையின் போது பல அதிர்ச்சியான தகவல்களை ஷீஷன் கான் வெளியிட்டுள்ளார்.

ஷீஜன் கான் தனக்கும் துனீஷா சர்மாவுக்கும் இடையிலான உறவையும் முறிவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

“ஷ்ரத்தா வால்கரின் கொடூரமான கொலைக்குப் (காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்த காதலன், பின்னர் காட்டில் உடல் பாகங்களை வீசிய சம்பவம்) பிறகு வெளிப்பட்ட நாட்டின் சூழ்நிலையால் மிகவும் குழப்பமடைந்ததால்” அவருடனான தனது உறவை முடித்துக் கொண்டதாக போலீஸிடம் கூறினார். போலீஸ் காவலில் இருந்த முதல் நாளில், ஷீசன், ஷ்ரத்தா வால்கர் வழக்கில் இருந்து வெளிப்பட்ட பின்விளைவுகளைக் கண்டு துனிஷாவுடனான உறவை முடித்துக்கொண்டதாகவும், தனக்கு 28 வயது என்றும், துனீஷாவுக்கு 20 வயது என்றும் வயது வித்தியாசத்தைப் போலவே இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உறவினர்களும் தடையாக இருப்பதாகவும் தனது காதலியிடம் கூறினார்.

“துனிஷா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றார், ஆனால் அந்த நேரத்தில் நான் அவளைக் காப்பாற்றினேன், துனிஷாவின் தாயிடம் அவளிடம் சிறப்புக் கவனமெடுக்கும்படி சொன்னேன், ”என்று ஷீசன் செய்தி நிறுவனமான ANI-யிடம் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், துனிஷாவின் தாய் வனிதா வெளியிட்டுள்ள வீடியோவில், “ஷீசன் கான் 20 வயது துனிஷாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார், ஆனால் அவர் பிரிந்தார். இதுமட்டுமின்றி, துனிஷாவுடன் டேட்டிங் செய்யும் போது ஷீசன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தாலும், அவர் துனிஷாவுடன் உறவைத் தொடர்ந்தார். மூன்று நான்கு மாதங்கள் அவளைப் பயன்படுத்தினான். ஷீசன் தண்டிக்கப்பட வேண்டும், அவனைத் தப்பவிடக் கூடாது என்றுதான் சொல்ல விரும்புகிறேன். நான் என் குழந்தையை இழந்துவிட்டேன், ”என்று கூறினார்.

இந்த சம்பவம் லவ் ஜிஹாத்துடன் தொடர்புடையது என சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சனம் வைக்கப்பட்டது. என்றாலும், பொலிசார் அதை நிராகரித்தனர்.

இந்நிலையில், நடிகை துனீஷா சர்மாவின பரிசோதனை அறிக்கையை மும்பை ஜேஜே மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

Leave a Comment