26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
ஆன்மிகம்

புத்தாண்டு ராசி பலன்கள் 2023: பொதுப்பலன்

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் – 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் – இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் – நல்ல மழை பொழியவும் – அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் – விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கிறது.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ஆம் திகதி பின்னிரவு – 17ஆம் திகதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு – ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு – சுக்லபக்ஷ தசமியும் – அஸ்வினி நட்சத்திரமும் – ஸிவ நாமயோகமும் – கவுலவ கரணமும் – மேஷ ராசியில் – ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் – கன்னியா லக்னத்தில் – ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35க்கு – நள்ளிரவு 12.00க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. புத்தாண்டு உபய நில லக்னமான கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும் – ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் – சனி கிரக கூட்டணி அமைந்து இருப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

வருடம் பிறக்கும் போது கிரகங்களுடைய பாதசாரங்கள்: லக்னம் – ஹஸ்தம் 2இல் – சந்திரன் சாரம் | சூரியன் – பூராடம் 1இல் – சுக்கிர சாரம் | சந்திரன் – அஸ்வினி 2இல் – கேது சாரம் | செவ்வாய்(வ) – ரோகினி 3இல் – சந்திர சாரம் | புதன்(வ) – மூலம் 3இல் – கேது சாரம் | குரு – உத்திரட்டாதி 3இல் – சுய சாரம் | சுக்கிரன் – உத்திராடம் 2இல் – சூர்ய சாரம் | சனி – திருவோணம் 4இல் – சந்திர சாரம் | ராகு – பரணி 3இல் – சுக்கிரன் சாரம் | கேது – விசாகம் 1இல் – குரு சாரம்

பொது பலன்கள் – நாடு: இந்த வருடம் ஓரளவு நிலைமை மேம்படலாம். ஆனால், மந்தமான நிலைமையே நீடிக்கும். வெளிநாட்டின் வருவாய் அதிகரிக்கும். வேலைவாய்ப்புக்கள் உருவாகும். வெளிநாட்டு உதவிகள் தொடரும். எனினும், அரசியலில் ஸ்திரமில்லாத நிலைமை தொடரும்.

மழையின் அளவு ஓரளவு இருக்கும். ஆறு, குளம் ஓரளவே  நிரம்பும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிக்கும். என்றாலும் வருட நடுப்பகுதியில் வறட்சி ஏற்படலாம். கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும். மாணவமணிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் பூமி அதிரும்.

கேதுவின் ஆதிக்கம் பெற்ற எண்- 2023: இந்த வருடத்தின் கூட்டு 2 + 0 + 2 + 3 = 7. ஏழு என்பது கேதுவின் ஆதிக்கம் பெற்ற எண். விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் கிராம தெய்வங்களுக்கும் உகந்த எண் ஏழாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் சூரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் கேது சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதனும் விரையாதிபதி சூரியனும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில்காரகனான சனி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் லாபாதிபதி சந்திரன் சாரம் பெற்றிருக்கிறார்.

தொழில் வளர்ச்சி அடையும். பங்குசந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பணம் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் மெல்ல மெல்ல சரியாகும். இந்த ஆண்டு நடைபெறும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை ஓரளவு மேம்படும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தை பிறப்புவிகிதம் அதிகமாகும். அதிகமான கோயில்களுக்கு புனரமைப்பு நடந்து கும்பாபிஷேகங்கள் நடைபெறும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment