தெபுவன, க்ளோடன் தோட்டம் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் கோடாரி, வாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெபுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
க்ளோடன் தோட்டம், பழைய தொகுதியை வசிப்பிடமாகக் கொண்ட
மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பிரபாகரன் (40) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று (25) இரவு இடம்பெற்ற உரையாடலின் பின்னரே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஒன்று வீட்டின் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை ஒட்டியுள்ள காட்டில் கோடாரி மற்றும் இரும்பு கம்பி ஒன்றும் காணப்பட்டதாகவும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வக அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டனர்.