தன்னைக் கிண்டல் செய்த நடிகை மாளவிகா மோகனனுக்க, நயன்தாரா பதில் அளித்துள்ளார்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
திரில்லர் பாணியில் தயாராகியுள்ள இப்படம் இடைவேளை இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நேர்காணலில் பங்குபெற்ற நயன்தாரா “ஒரு நடிகை (மாளவிகா மோகனன்) நான் நடித்த ஒரு மருத்துவமனைக் காட்சியைக் குறிப்பிட்டு, ‘உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு தலைமுடி கலையாமல் படுத்திருக்க முடியுமா? எனக் கூறினார். அது கலைப் படம் அல்ல. அந்த நடிகை விரும்பியதுபோல் தோற்றமளிக்க. நான் நடித்தது ஒரு கமர்சியல் படம். அதில் என் இயக்குநர் அதீத சோகம் வேண்டாம் என்று என்னை அப்படி நடிக்க வைத்தார். கமர்சியல் படமென்றால் அப்படித்தான் இருக்கும்” என பதிலளித்துள்ளார்.
மாளவிகா மாஸ்டர் உள்பட 3 படங்களிலேயே நடித்துள்ளதால் அவர் நயன்தாராவை கிண்டல் செய்யலாமா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
#Nayanthara's Reply to Malavika Mohanan..👌 pic.twitter.com/YHNxZE1NpL
— Laxmi Kanth (@iammoviebuff005) December 21, 2022