24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
விளையாட்டு

மெஸ்ஸியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…நித்திரை கொள்ளும் போதும் ஒரு மணித்தியாலத்தில் ரூ.32 இலட்சம் சம்பளம்!

அர்ஜென்டினாவின் மூன்றரை தசாப்த காத்திருப்பை லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அணி நிறைவேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றது அர்ஜென்டினா.

இந்த உலககோப்பையில் அனேகர் அர்ஜென்டினா அணியை ஆதரித்தனர். அதற்கு ஒரே காரணம் மெஸ்ஸி. பீலே, ரொனால்டோ காலத்தில் பிரேசிலை, மரடோனா காலத்தில் அர்ஜென்டீனாவை என உலக ரசிகர்கள் விரும்புவதற்கு இந்த நட்சத்திர வீரர்களே ஒரே காரணம்.

கிளப் அணிகளில் அனல் பறக்கும் மெஸ்ஸியின் ஆட்டம், தேசிய அணியென வரும் போது சுரத்தில்லாமல் போய்விடுகிறது என்ற விமர்சனம் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமர்சனமெல்லாவற்றையும் உடைத்த நொறுக்கி, அர்ஜென்டீனாவிற்கு உலககோப்பையை வென்று கொடுத்துள்ளார் மெஸ்ஸி.

மெஸ்ஸியின் சிறு பராய வீடு

இந்த கோப்பையின் மூலம் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கை முழுமையடைந்துள்ளது.

மெஸ்ஸி கால்பந்தின் அடையாளமாக மட்டுமல்ல, ஒரு தொழிலதிபராகவும் இருக்கிறார். வணிகங்களுடன், ஏராளமாக சொத்துக்களையும் வாங்கிக் குவித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழின் படி கடந்த ஆண்டு மெஸ்ஸி 75 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். இந்த சம்பாத்தியம் உலகில் உள்ள மற்ற வீரர்களை விட அதிகமானது.

மெஸ்ஸியின் விமானம்

►கால்பந்து அணியான Paris Saint-Germain FC வழங்கும் சம்பளம் மட்டும் வருடத்திற்கு 35 மில்லியன் டொலர். அதாவது மெஸ்ஸி வாரத்திற்கு 738,000 டொலர், ஒரு நாளைக்கு 105,000 டொலர் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 8,790  டொலர் சம்பாதிக்கிறார். அதாவது, ஒரு மணித்தியாலத்தில் இலங்கை பெறுமதியில் ரூ.32 இலட்சம் சம்பாதிக்கிறார் மெஸ்ஸி.

►கடந்த கோடையில் அர்ஜென்டினாவின் உள்ளூர் பிரெஞ்சு அணிக்காக ஒப்பந்தம் செய்த மெஸ்ஸி, மொத்தமாக 25 மில்லியன் டொலர் சம்பாதித்தார்.

►கடந்த ஆண்டு, மெஸ்ஸி களத்திற்கு வெளியே 55 மில்லியன் டொலர் சம்பாதித்தார். டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் மற்றும் என்பிஏ சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் மட்டுமே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

► மெஸ்ஸி விளம்பரங்கள் வகையில், அடிடாஸ், பட்வைசர் மற்றும் பெப்சிகோ உடனான ஒப்பந்தங்களும், கிரிப்டோகரன்சி ஃபேன் டோக்கன் பிளாட்ஃபார்ம் சோசியோஸுடன் ஆண்டுக்கு 20 மில்லியன் டொலர் கூட்டாண்மை ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, மெஸ்ஸி ஒரு வீரராக 1.15 பில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். இது தவிர, வணிகங்களில் சம்பாதித்துள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ஃபிலாய்ட் மேவெதர் மட்டுமே 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக தொழில் வாழ்க்கையில் சம்பாதித்துள்ளனர்.

அர்ஜென்டினாவில் மெஸ்ஸியின் வீடு

விளையாட்டு வீரர்களின் சொந்த வணிக வருவாய் அடிப்படையில், தற்போது, லெப்ரான் ஜேம்ஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் டைகர் வுட்ஸ் மட்டுமே மெஸ்ஸியை விட முன்னணியில் உள்ளனர்.

கார்களின் காதலன்

மெஸ்ஸியின் சம்பாத்தியத்தின் கணிசமான பகுதி கார்கள் வாங்க பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மெஸ்ஸியிடம் 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள பகானி சோண்டா டிரைகலர், ஃபெராரி எஃப்4 30 ஸ்பைடர், டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி8, மசெராட்டி கிரான் டூரிஸ்மோ போன்ற சொகுசு கார்கள் உள்ளன.

பார்சிலோனாவில் மெஸ்ஸியின் வீடு

2016 ஆம் ஆண்டில் மெஸ்ஸி ஒரு விலையுயர்ந்த காரை, 1957 ஃபெராரி 335 ஸ்போர்ட் ஸ்பைடர் ஸ்காக்லிட்டியை 37 மில்லியனுக்கு வாங்கியதாக தகவல் பரவியிருந்தது.

ஆடம்பர கட்டிடங்கள்

மெஸ்ஸியின் சொத்துக்களில் மிகவும் ஆடம்பரமானது பார்சிலோனாவின் புறநகரில் உள்ள 7 மில்லியன் டொலர் பெறுமதியான மாளிகையாகும். இந்த கட்டிடத்தில் நீச்சல் குளம், உட்புற உடற்பயிற்சி கூடம், தியேட்டர் மற்றும் ஸ்பா உள்ளது.

அமெரிக்காவில் மெஸ்ஸியின் வீடு

மெஸ்ஸியின் சொந்த ஊரான அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோவில் ஒரு மாளிகையையும், புளோரிடாவின் செயின்ட் ஐல்ஸ் கடற்கரையில் ஒரு சொகுசு குடியிருப்பும் சொந்தமாக உள்ளது.

2017 முதல் மெஜஸ்டிக் ஹோட்டல் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இபிசா, மஜோர்கா மற்றும் பார்சிலோனாவில் உள்ள ரிசார்ட்டுகளைத் தவிர, MIM ஹோட்டல் சங்கிலியையும் மெஸ்ஸி வைத்திருக்கிறார்.

2021 இல், மெஸ்ஸி குளிர்காலத்திற்காக அரான் பள்ளத்தாக்கில் பைரனீஸின் மையத்தில் ஒரு ரிசார்ட்டைத் திறந்தார். ஃபோர்ப்ஸ் படி..நான்கு நட்சத்திர ஹோட்டலில் 141 அறைகள் உள்ளன. ஸ்பா, உட்புற நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், மலை வழிகாட்டி சேவைகள் உள்ளன.

பால்கனி பெரியது

மெஸ்ஸி 2017 ஆம் ஆண்டு 35 மில்லியன் டொலருக்கு ஒரு ஹொட்டலை வாங்கினார். ஆனால் அந்த கட்டிடத்தில் இருந்த பால்கனி பெரியதாக இருந்தது. பால்கனிகளை அகற்ற அல்லது குறைக்கும் முயற்சியில் ஹோட்டல் இடிந்து விழும் வாய்ப்புள்ளதாக பொறியியலாளர்கள் எச்சரித்தனர். பிரச்சினையை தீர்க்க முடியாததால், மெஸ்ஸி ஹொட்டலை முழுவதுமாக இடித்து விட்டார்.

15 மில்லியன் தனியார் ஜெட்

மெஸ்ஸியிடம் குல்ஃப்ஸ்ட்ரீம் வி என்ற தனியார் ஜெட் விமானம் உள்ளது. அதில் இரண்டு சமையலறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. அதிகபட்சமாக பதினாறு பயணிகள் அமரும் வசதி உள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு உதவ லயோனல் மெஸ்ஸி அறக்கட்டளை UNICEF உடன் இணைந்து 2007 இல் தொடங்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், மெஸ்ஸி சிரியாவில் 1,600 அனாதை குழந்தைகளுக்கு வகுப்பறைகளை கட்டுவதற்கு உதவுவதற்காக தனது சொந்த பணத்தை நன்கொடையாக வழங்கினார் என்று UNICEF தெரிவித்துள்ளது. 2019 இல், கென்யர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க அறக்கட்டளை 218,000 டொலர் நன்கொடையாக வழங்கியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment