வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இன்று காலை நீர் குழி ஒன்றில் விழுந்து நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டம் ஒன்றில் வெட்டப்பட்டிருந்த நீர் குழி ஒன்றில் தவறி விழுந்தத குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மரணமடைந்த நபர் கும்புறுமூலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய உதிஸ்கரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1