அம்பாறை மாவட்டத்தில் பல தசாப்தங்களாக இயங்கிவரும் சமூக சேவை நிறுவனமான GAFSO நிறுவனமானது HELVETAS, GCERF நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுத்தி வரும் சமூக நல்லிணக்கம் மற்றும் வன்முறை தவிர்த்தல் எனும் “HOPE OF YOUTH” “இளைஞர்களின் நம்பிக்கை” எனும்வேலைத்திட்டத்தின் ஊடாக வன்முறை சிந்தனையை தவிர்த்தல் எனும் தொனிப்பொருளில்இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வானது கடந்த ஞாயிறு (18) அம்பாறை மிகிந்தபுர வித்தியாலய மைதானத்தில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் நான்கு மதங்களையும் சேர்ந்த 80 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதுடன் ஆர்வமாகபல்வேறு போட்டிகளில் பங்குபற்றினர். இலக்குக்கு எறிதல், கிரிக்கெட், பந்துபரிமாற்றம், பலூன்மாற்றுதல், சங்கீதகதிரை, யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல் என்பன இடம்பெற்றதுடன் சமூகநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமான நான்கு மத இளைஞர்களும் இணைந்து “நாம் இலங்கையர்” எனும் தலைப்பில் நாடகமொன்றையும் அரங்கேற்றி இருந்தனர்.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்தரத்னநாயக கலந்து கொண்டதுடன் , கப்சோ நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் அப்துல் ஜப்பார், அரசசார்பற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இனணப்பாளர் இர்பான், தேசிய இளைஞர் மன்ற அதிகாரிஹமீர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேகா எதிரிசிங்க, மற்றும் கப்சோ நிறுவனத்தின் திட்டபணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் என பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் இன நல்லுறவை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் இவ் இளைஞர் குழு பல்வேறுசமூக நலன் விடயங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு இது மிகவும்வரவேற்க்க தக்க வேலைத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.