பருத்தித்துறை நகரசபை தவிசாளர் பதவிவிலகியுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், 9.20 மணியளவில் பதவிவிலகல் கடிதத்தை செயலாளரிடம் சமர்ப்பித்தார்.
பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் கடந்த 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட போது, 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று இரண்டாவது முறையாக வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும், வரவு செலவு திட்டம் வெற்றியடையும் நிலைமையிருக்கவில்லை.
இதையடுத்து பருத்தித்துறை நகரசபை தவிசாளர் யோசெப் இருதராஜா தனது பதவியை துறந்துள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறும்.
பருத்தித்துறை நகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1