நாய்கள் எப்போதுமே தன் இருப்பை பதிவுசெய்ய மனிதர்களுக்கு வேடிக்கை காட்டும் விலங்கு. அதிலும் வீட்டில் அடைந்து கிடந்து வெளியே வரும் நாய்களின் உற்சாகத்திற்கும் வேடிக்கைக்கும் அளவே இருப்பதில்லை. அதனாலேயே நாய்களின் வேடிக்கைகளே அதிகம் படம்பிடிக்கப்பட்டு, இணையத்தில் அதிகம் காணவும் கிடைக்கிறது. இங்கேயும் கடற்கரையில் வேடிக்கை காட்ட நினைத்து, அது விபரீதத்தில் முடிந்த நாய் ஒன்றின் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் ஆச்சரியமும் இல்லை. அந்த வீடியோ உங்களையும் கூட ஆர்ப்பரித்துச் சிரிக்க வைக்கலாம். அந்த வீடியோ WeRate dogs என்கிற ட்விட்டர் பக்கத்தில், “இது டிக்ஸி. அவன் அந்த பறவைகளை வேகமாக நெருங்கினான்…” என்று பகிரப்பட்டுள்ளது.
சுமார் 15 விநாடிகளே ஒடக்கூடிய அந்த வீடியோவின் தொடக்கத்தில் கடற்கரையில் ஒரு நாய் நிற்கிறது. ஆரம்பத்தில் தண்ணீரை நோக்கி ஓடத் தொடங்தும் டிக்ஸி (நாய்) தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அங்கு கூட்டமாக நிற்கும் பறவைகளை நோக்கி வேகமாக ஓடத் தொடங்குகிறது. அவற்றை நெருங்குவதற்குள் அந்தப் பறவைக் கூட்டம் பறந்தோடி விட, தன் பாதையை மீண்டும் மாற்றிக்கொண்டு திரும்பி அதைவிட வேகமாக உற்சாகமாக ஓடி வருகிறது. மனதில் புரண்டோடிய உற்சாகத்தில் டிக்ஸி அதை கவனிக்கவில்லை… அய்யோ டிக்ஸியை எங்கே…? பாதையில் இருந்த பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து தன்னைச் சிலுப்பிக்கொள்ளும் டிக்ஸியின் வேடிக்கை உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம்.
இந்த வீடியே கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அது போஸ்ட் செய்யப்பட்ட நாளில் இருந்து அது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 1.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதேபோல் பலர் இதற்கு கமென்ட் செய்துள்ளனர்.
ஒரு பயனர், “அவன் நலமாக இருக்கிறானா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு “அவன் நலமாக இருக்கிறான்” என பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. “ஒரு வீரனைப் போல உலுக்குங்கள்” என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார். மூன்றாவது பயனர், “அவன் வேண்டுமென்றாதான் அப்படிச் செய்திருக்கிறான். அது மனிதர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் என்று தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
சிலர் தங்கள் நாய்களை காட்டு விலங்குகள், பறவைகளை துரத்த அனுமதிக்கக் கூடாது என்று மிகவும் கவலை தெரிவித்தும் இருக்கிறார்கள். ஒரு பயனர், தங்கள் நாய்களை இப்படி அலட்சியமாக விடும் நபர்களை ஊக்குவிக்காதீர்கள். இதுபோன்ற செயல்களால் பல காட்டு விலங்குகள் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
This is Digsy. He came at those birds really fast. Life came at him faster. 13/10 pic.twitter.com/YmTnxVBnN5
— WeRateDogs® (@dog_rates) December 12, 2022