வென்னப்புவ, நைனாமடம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரு பாதாள உலக நபர்களினால் தாக்கப்பட்ட வர்த்தகர் ஒருவரின் 22 வயது மகன் ஆபத்தான நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
உடைந்த போத்தலால் இளைஞனின் தலையில் தாக்கப்பட்டுள்ளதுடன், உடைந்த போத்தலால் இளைஞனின் இடுப்பிலும் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுநாயக்கவில் தங்கியிருந்த பாதாள உலகத் தலைவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்ட பொடி குமார என்பவரே குறித்த இளைஞன் போத்தலால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பொலிஸ் பரிசோதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரும் பாதாள உலகக் குழுத் தலைவரும் அவரது கூட்டாளியும் தப்பிச் சென்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.