25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

வட்டுவாகல் கடற்படை முகாமிற்குள் சீனரின் காணி இரகசிய அளவீடு: காணி உத்தியோகத்தர்கள் கடற்படையால் பலவந்தமாக அழைத்து செல்லப்பட்டதாக கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு – வட்டுவாகல், கோத்தபாய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்காக கொழும்பிலிருந்து வந்த நிலஅளவையாளர்கள் அளவீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டுவாகலில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமை நிரந்தர முகாமாக மாற்றுவதற்காக, பொதுமக்களின் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

எனினும், காணி உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்படையின் தொடர் முயற்சி பொதுமக்களால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் பொதுமக்களிற்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் உத்தரவாதமொன்று வழங்கப்பட்டது. அரச அதிபர் தலைமையில் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடல் நடத்திய பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவாதத்திற்கு மாறாக, கொழும்பில் இருந்து  நிலஅளவையாளர்கள் கடற்படை முகாமிற்குள் இரகசியமாக அழைத்து வரப்பட்டிருந்தனர்.

ஒரு சீனரும், ஒரு சிங்களவரும் தமக்கு சொந்தமான காணிகளை கடற்படையினருக்கு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். அவர்களின் காணிகளே இன்று அளவிடப்பட்டன.

இன்று இரகசிய அளவீட்டு பணி நடக்கும் விபரமறிந்த பொதுமக்கள் கோத்தபாய கடற்படை முகாமின் வாயிலை முற்றுகையிட்டனர். காணி அளவீட்டின் போது, அயல் காணி உரிமையாளர்களின் முன்னிலையிலேயே அளவீடு செய்ய வேண்டும், அப்படியில்லாத பட்சத்தில் அது சட்டவிரோத நடவடிக்கையென்பதை சுட்டிக்காட்டினர்.

கொழும்பிலிருந்து நில அளவையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்த போதும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் அங்கு பிரசன்னமாகியிருக்க வேண்டியிருந்தது.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் 2 உத்தியோகத்தர்கள் முகாமிற்குள் நுழைய முடியாத நிலையிலிருந்தனர். அவர்களை இராணுவத்தினர் தமது பேருந்தில் வலுக்கட்டாயமாக இழுத்து ஏற்றிக்கொண்டு, முகாமிற்குள் சென்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டினார்.

ஏற்கெனவே மக்களிற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், மக்களின் எதிர்ப்பை கருத்தில் எடுக்காமல் இரண்டு உத்தியோகத்தர்களை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தினர் கடற்படை பேருந்தில் முகாமிற்குள் அனுப்பியது தவறானதென மக்கள் குற்றம்சாட்டினர்.

மக்கள் நீண்டநேரமாக போராட்டம் நடத்தியும், பிரதேச செயலகம், மாவட்ட செயலக அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதையடுத்து மக்கள் மாவட்ட செயலகம் சென்று, காணி சுவீகரிப்பு நடவடிக்கையின் சட்டவிரோத தன்மையை சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

Leave a Comment