தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரை தூக்கி நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்றம் அலுவலகத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். அதில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.
இவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. ரசிகர்களை சந்திக்க கருப்பு நிற உடையில், புதிய ஹேர்ஸ்டைலுடன் வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை நடிகர் விஜய் தன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது, இது வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1