42 வயதான ஆசிரியர் தனது மாணவியான 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மாட்டுக்நாத் என்ற ஆசிரியர், அவரை விட 22 வயது இளையவரான தனது மாணவி ஜூலியிடம் காதலை தெரிவித்துள்ளார்.
அவர் ஆங்கில ஆசிரியர். அவரது மனைவி சில வருடங்களின் முன்னர் இறந்து விட்டார். தனது பயிற்சி வகுப்பில் ஆங்கிலம் படித்த மாணவியை காதலித்து, கடந்த வியாழக்கிழமை திருமணம் செய்துள்ளார்.
இருவரது வீடும் சுமார் 800 மீற்றர்கள் இடைவெளியில் அமைந்துள்ளன.
இந்த வீடியோவிற்கு சமூக ஊடங்களில் கலவையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
न उम्र की सीमा हो! बिहार के समस्तीपुर में 42 साल के टीचर को 20 साल की स्टूडेंट से प्रेम हो गया..दोनों ने राजी खुशी विवाह रचाया..वीडियो खूब वायरल हो रहा..लोग मटुकनाथ और जूली की प्रेम गाथा को याद कर रहे..वीडियो-श्री राजपूत..Edited By- @Sinhamegha8 pic.twitter.com/dVp0KfoJGW
— Prakash Kumar (@kumarprakash4u) December 10, 2022