அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக செம்பாட்டு மண் ஏற்றிவந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் – உரும்பிராய் வீதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகாமையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கோப்பாய் விசேட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிசாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1