25.4 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இந்தியா

கனமழை, பலத்த காற்றிலும் 8வது நாளாக பிரகாசித்த அண்ணாமலையாரின் தீபம்

கனமழை மற்றும் பலத்த காற்று வீசியபோதும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையில் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் 8வது நாளாக இன்று சுடர்விட்டு எரிந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக, 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த 6ஆம் திகதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டன. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு தொடர்ந்து காணலாம். இதற்காக 4,500 கிலோ நெய் மற்றும் 1,100 மீட்டர் காடா துணி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம், மாண்டஸ் புயல் மற்றும் கன மழையிலும் பிரகாசமாக எரிந்து வருகிறது.

திருவண்ணாமலையில் கடந்த 9ஆம் திகதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதுடன், பலமாக காற்று வீசுகிறது. இதன் தாக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) நீடித்தது. அப்போதும் மழை மற்றும் காற்றை பொருட்படுத்தாமல், 8வது நாளாக ‘மோட்ச தீபம்’ என அழைக்கப்படும் பரம்பொருளான அண்ணாமலையாரின் தீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.

மகா தீப தரிசனத்தை வரும் 17ஆம் திகதி அதிகாலை வரை தரிசிக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment