பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதியின் விவாகரத்து குறித்து அண்மை நாட்களாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. சானியா-ஷோயப் விவாகரத்து பற்றிய செய்தி அவர்களின் ரியாலிட்டி டாக் ஷோவான ‘த மிர்சா மாலிக் ஷோ’வை விட அதிகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
எனினும், இரு தரப்பிலும் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், விவாகரத்து தொடர்பாக ஷோயப் மாலிக் முதன்முறையாக பேசியுள்ளார்.
ஷோயப் மாலிக்கை ஒரு செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய போது, இது தனது தனிப்பட்ட விஷயம், அதை அவர்கள் இருவரிடமும் விட்டுவிட வேண்டும் என்று கூறினார்.
இந்த முழு விஷயத்திலும் ஊடகங்களின் தலையீடு தனக்கு பிடிக்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் ஷோயப் சொல்ல முயன்றுள்ளார்.
மேலும், சானியாவும், தானும் பிரிந்து இருப்பது குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் ஷோயப் கூறினார்.
ஷோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா ஒப்பந்தம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான சட்ட மோதல்கள் காரணமாக விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சானியாவை ஏமாற்றிய ஷோயப்?
ஷோயப் மாலிக் சானியா மிர்சாவை ஏமாற்றி விட்டதாகவும், இதனால் விவாகரத்து செய்யும் சூழ்நிலை வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷோயப் மாலிக் கடந்த ஆண்டு ஆயிஷா உமருடன் ஒரு போட்டோஷூட் செய்தார். அந்த போட்டோஷூட்டின் பின்னர் ஷோயப்பும், ஆயிஷாவும் ஒன்றாக இணைக்கப்பட்டு கிசுகிசுக்கப்படுகிது.
இந்த போட்டோஷூட் குறித்து ஷோயப் மாலிக் கூறுகையில், ‘கிரிக்கெட் வீரராக இருந்ததால் எனக்கு மொடலிங் புரியவில்லை. ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். ஆனால் ஆயிஷா இந்த துறையில் நிறைய உதவி செய்தார்“ என்றார்.
கடந்த மாதம் சானியா மிர்சா வெளியிட்ட சில இன்ஸ்டாகிராம் பதிவுகள் விவாகரத்து தகவலை பரவ வைத்தது. கடந்த மாதம், சானியா மிர்சா தனது மகன் இசானுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு, ‘மிகவும் கடினமான நாட்களில் என்னை அழைத்துச் செல்லும் தருணங்கள்’ என்று எழுதினார்.
மற்றொரு பகிர்வில், உடைந்த இதயங்கள் எங்கு செல்ல வேண்டும், அவர்கள் அல்லாஹ்விடம் செல்ல வேண்டும் என்றும் சானியா எழுதினார்.
ஷோயப் மாலிக்- சானியா மிர்சா இருவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது
ஷோயப் மாலிக்குடன் திருமணத்திற்கு முன்பு, சானியா மிர்சா தனது பால்ய நண்பரான சோராப் மிர்சாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் சோராப்-சானியாவின் நிச்சயதார்த்தம் முறிந்தது.