27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
சினிமா சின்னத்திரை

“இப்போதும் அந்தப் பொண்ணு கூடத்தான் சுத்திகிட்டிருக்கார்“: அர்னவ் மனைவி திவ்யா வேதனை

சீரியலில் சேர்ந்து நடித்தபோது காதல் மலர்ந்து நிஜ வாழ்வில் இணைந்தவர்கள் அர்னவ் – திவ்யா ஜோடி.

ஆனால் இந்தத் திருமணத்தை அர்னவின் வீட்டில் எதிர்த்தது மற்றும் திருமணத்துக்குப் பிறகு அர்னவ் இன்னொரு நடிகையுடன் காட்டிய நெருக்கம் முதலான பிரச்னைகளால் தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு உருவாகி, பஞ்சாயத்து காவல் நிலையம் வரை வந்ததில், அர்னவ் கைதாகி 15 நாள் சிறையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்தார்.

அர்னவுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், “திவ்யாவுக்குத் தொந்தரவு தரக்கூடாது; குறிப்பாக அவரது வீட்டுக்குச் செல்லக்கூடாது“ என நிபந்தனை விதித்தது.

எனவே தற்போது அர்னவ் திவ்யா இருவரும் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன், திவ்யாவுக்கு ‘மகராசி’ சீரியல் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். இது தொடர்பாக திவ்யாவிடம் பேசினோம்.

“என்னுடன் சீரியலில் நடித்தவர்கள் பிரியத்துடன் பார்க்க வந்தாங்க. அதைக் கூட அர்னவால் பொறுத்துக் கொள்ள, சகித்துக் கொள்ள முடியலை. சமூக வலைதளம் மூலமா என்னென்னவோ சாடை மாடையாப் பேசிட்டிருக்கிறார். அதேபோல ஜாமின் கேட்டப்ப, ‘மனைவியைக் கவனிச்சிக்கணும்’னு ஒரு வார்த்தையைச் சொல்லித்தான் கேட்டிருக்கார். ஆனா வெளியில் வந்த பிறகு எனக்கு ஒரு ஃபோன் கால் கூட பண்ணலை.

தவிர, என்னை மேலும் மேலும் கஷ்டப்படுத்தற மாதிரி இப்பவும் கரண்ட் சீரியல்ல உடன் நடிக்கிற அந்தப் பொண்ணு கூடத்தான் சுத்திட்டிருக்கிறார்.

இதையெல்லாம் விட, இப்ப நான் வசிக்கிற வீட்டுக்குக் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. கட்ட மறுக்கிறார். இத்தனைக்கும் வீடு அவர் பேர்ல தான் இருக்கு. அவரை நான் முழுசா நம்பினதால என் நகைகளையெல்லாம் வச்சு முதல் பணத்தைப் போட்டு வீட்டை வாங்கினோம். நாமினியாக் கூட அவரது அம்மாவைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனா வீட்டுக்கு ரெண்டு மாசம் இ.எம்.ஐ கட்டலை. நாங்க சேர்ந்து இருந்தவரை நாந்தான் கட்டினேன். என்னை வேண்டாம்னு முடிவு பண்ணி செயல்படத் தொடங்கின பிறகு அவர் பெயரில் இருக்கிற வீட்டுக்கு நான் எதுக்குக் கட்டணும்?

வங்கியில் இருந்து அவர்கிட்டப் பேசியிருக்காங்க. அப்ப, ‘அந்த வீட்டுல நான் இல்ல. அங்க இருக்கிறவங்ககிட்டக் கேளுங்க, நான் கட்ட முடியாது. இல்லாட்டி வீட்டை வங்கி எடுத்துக் கொள்ளட்டும்’னு சொல்லி இருக்கிறார்.

எனக்கு இது ஆறாவது மாசம். இந்த நேரத்துல வங்கியில இருந்து கூப்பிட்டு, ‘இ.எம்.ஐ. கட்டலை. வீட்டை எடுத்துக் சொல்கிறார் உங்க கணவர்’னு சொல்றாங்க. மனசுக்கு ரொம்பவே பாரமா இருக்கு. என்ன செய்யறதுன்னே தெரியலை” என வேதனையுடன் முடித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil

‘கடவுளே…’ கோஷத்தை இனி எழுப்பாதீர்கள்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

Pagetamil

மகனுடன் சொத்துப் பிரச்சினை: பத்திரிகையாளர்களை அடித்து விரட்டிய நடிகர் மோகன் பாபு

Pagetamil

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

Pagetamil

Leave a Comment