பிரேசில் என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது நெய்மர் தான். கால்பந்தில் ஐரோப்பாவின் மேலாதிக்கம் தோன்றி, பிரேசிலின் பொற்காலம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நேரத்தில் நெய்மர் கால்பந்து உலகில் நுழைந்தார்.
அதன் பின் பெரும்பாலான ரசிகர்களால், நெய்மரை சுற்றி பிரேசில் கால்பந்து உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நெய்மர் ஆடினார். செர்பியாவுடனான அந்த ஆட்டத்தில் காயமடைந்து, அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் விளையாடவில்லை.
இன்று நடக்கும் தென்கொரியாவுடனான ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என கருதப்படுகிறது.
நெய்மர் தனது ஆட்டத்திறனினால் மட்டுமே எப்பொழுதும் செய்திகளில் இடம்பிடிப்பவர் அல்ல. விளையாட்டு உலக கிசுகிசுக்களிலும் நெய்மர் பெரிய நட்சத்திரம்தான். கிட்டத்தட்ட கால்பந்து ரோமியோ என அவரை சொல்லலாம்.
பந்தை விரைவாக பாஸ் செய்வதை போல, அவர் அதி விரைவாக தோழிகளை மாற்றிக்கொள்பவர். சில மாதங்களிற்கு ஒரு காதலியென அவர் வாழ்பவர். நெய்மர் 19 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோமியோ நெய்மர்
நடிகைகள், மொடல் அழகிகள் என பல பிரபலங்கள் கிசுகிசு செய்திகளில் நெய்மருடன் இணைத்து பேசப்பட்டுள்ளனர். அவர் தனது காதல் விவரங்களை பெரும்பாலும் இரகசியமாக வைத்திருக்கும் அதே வேளையில், சிலவற்றைப் பகிரங்கப்படுத்தியும் உள்ளார்.
நெய்மரின் கடைசி காதலியாக அறியப்பட்டவர் தொழிலதிபர் புருனா பைன்கார்டோ. 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அவர்களின் உறவில் சில பிரச்சனைகள் எழுந்ததாகவும், அதனால் அவர்கள் பிரிந்ததாகவும் வதந்திகள் வந்தன. அது உண்மையாக என்பதும் தெரியவில்லை.
ஒருவேளை உண்மையாக இருந்தால், நெய்மரிற்கு இப்போது இன்னொரு காதலியும் இருக்கக்கூடும். அவர் யார் என்பதே இப்போதைய கேள்வி.
19 வயதில் தந்தையானார்
நெய்மரின் மகனின் பெயர் டேவிட் லூகா ஜி சில்வா. நெய்மருக்கு 19 வயதாக இருந்தபோது டேவிட் பிறந்தார். ஆரம்பத்தில் நெய்மர் இந்த விஷயங்களை ஊடகங்களிடம் இருந்து மறைத்தார். பின்னர், டேவிட் தனது ஆரம்பகால தோழிகளில் ஒருவரான கரோலினா டான்டாஸின் மகன் என்பதை வெளிப்படுத்தினார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் கரோலின் மற்றும் அவரது மகன் லூகாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். நெய்மரின் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இந்த மலர்ந்த ஒரு காதல் உறவிது.
நெய்மருக்கு பல காதலிகள். என்றாலும், அவர்களில் பிரேசிலிய மொடலும் நடிகையுமான புருனா மார்க்வெஸுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். நெய்மர் புருனாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் சுமார் ஆறு வருடங்கள் காதல் உறவில் இருந்தனர். இருவரும் பரஸ்பர புரிதலுடன் பிரிந்தனர். இருவரும் தங்கள் தொழிலை முதன்மைப்படுத்தி பிரிந்து செல்ல முடிவு செய்தனர்.
பின்னர் நெய்மர் ஐரோப்பிய கிளப் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினார். இந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் நெய்மரின் காதலிகளாக வந்து சென்றவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை.
ஐரோப்பாவில் நெய்மரின் முதல் காதலி பொப் நட்சத்திரம் லாரிசா மாசிடோ மக்காடோ. அவரை பிரிந்த பின்னர், டெய்லா அயாலா என்ற மொடலுடன் உறவில் இருந்தார்.
இந்த உறவுகளை நெய்மர் ஆரம்பத்தில் வெளிப்படுத்துவதில்லை. அது பற்றிய கிசுகிசுக்கள் பரவி ஒரு கட்டத்தை கடக்கும்போது, அந்த காதலியுடனான படத்தை நெய்மர் வெளியிடுவார்.
நெய்மர் பார்சிலோனா ரசிகை ஒருவரையும் காதலித்துள்ளார்.
இதற்கிடையில், நெய்மர், அமெரிக்க பொப் பாடகி, நடிகை நடாலியா பாருலிக் என்பவரையும் சில காலம் காதலித்து வந்தார்.பின்னர் பிரிந்தனர்.
பிரேசில் ரிக்ரொக் நட்சத்திரம் ப்ரூனா பைன்கார்டோவும் நெய்மரும் காதலிப்பதாக அண்மைக்கால தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சமீபகாலமாக அந்த உறவிலும் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெய்மரின் தற்போதைய காதலி யார் என்பதுதான் இப்பொழுதுள்ள பெரிய கேள்வி.