பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதன் மூலம் சுமார் 112 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. 1910ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளில் 500 இற்கும் அதிக ஓட்டம் குவித்த முதலாவது அணியானது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் நான்கு வீரர்கள் சதம் குவித்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது நாளில் இலங்கை 509 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு நாளும் பெற்ற அதிக ஓட்டங்கள் வரிசையில், இப்பொழுது இலங்கைக்கு அடுத்த இரண்டாவது அணி இங்கிலாந்து.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி ராவல்பிண்டி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த சாக் கிராலி (122), பென் டக்கெட் (107), போப் (108) , ஹேரி ப்ரூக் (101 நொட்-அவுட்) என நான்கு பேரும் சதம் விளாசி இருந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 75 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் என்ன செய்தார்கள் என்பதே புரியவில்லை.
முதல் நாளின் மூன்று செஷனில் 174, 158 மற்றும் 174 ரன்களை இங்கிலாந்து அணி குவித்திருந்தது. அதில் கடைசி செஷனில் குவித்த ரன்கள் வெறும் 21 ஓவர்களில் எடுத்தது இங்கிலாந்து அணி.
1 டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நான்கு சதங்களை விளாசிய முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது. 1884ல் இங்கிலாந்துக்கு எதிராக ஒருமுறையும், 2012ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருமுறையும் அவுஸ்திரேலியாவில் மூன்று வீரர்கள் சதமடித்திருந்தனர்.
டெஸ்ட் போட்டியின் தொடக்க செஷனில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இங்கிலாந்து தற்போது 2வது இடத்தில் உள்ளது. மதிய உணவுக்கு முன் இங்கிலாந்து 174 ரன்களை பெற்றிருந்தது.
டெஸ்ட் போட்டியின் முதல் செஷனில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் தென்னாபிரிக்கா முதலிடத்தில் உள்ளது. 1902ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 41 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.