அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (27)மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன் போது தீப சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்
அங்கு கலந்து கொண்டவர்களுக்கு தென்னம் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வினை ஒரு நிமிட மௌன வணக்கத்தை அடுத்து பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, வாகரை, கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு, திருகோணமலையில் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
-பா.டிலான்-