மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு .இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டு உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1