விவாகரத்துக்குப் பின், நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகக் கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவர்கள் இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் அவர்கள் காதலிப்பது உறுதி என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகை சோபிதா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், வானதியாக நடித்திருந்தார்.
நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிந்த பிறகு, அவர் சோபிதா துலிபாலுடன் டேட்டிங் செய்வதாக சில காலமாக செய்திகள் வெளியாகின்றன. இருவரும் அதை மறுக்கவில்லை.
முன்னதாக, நாக சைதன்யா ரசிகர்கள் இந்த வதந்திகள் அனைத்தும் சமந்தா தரப்பினரால் பரப்பப்பட்டவை என்று குறிப்பிட்டனர். இருப்பினும், சமந்தா அவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
பெண் பற்றிய வதந்திகள் என்றால் உண்மையாக இருக்க வேண்டும். பையன் மீது வதந்திகள் என்றால் ஒரு பெண்ணால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கொஞ்சமாவது மூளையை வளருங்கள் என்ற சாரப்பட பதிலடி கொடுத்திருந்தார்.