27.4 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இந்தியா

திருமணத்தை மீறிய உறவு: இளம் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டபோது உயிரிழந்த 67 வயது நபர்!

வீட்டில் சமையல் வேலை செய்யும் 35 வயதான பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய  உறவை தொடர்ந்த முதியவர், அந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள புத்தேனஹள்ளியில் வசிப்பவர் பால சுப்பிரமணியன். 67 வயதான இவர், கடந்த 16ஆம் திகதி தன்னுடைய பேரனை பேட்மின்டன் வகுப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாலை 4.55 மணியளவில், பால சுப்ரமணியன் தன் மருமகளை செல்போனில் தொடர்புகொண்டு, தனக்கு ஒரு வேலை இருப்பதாகவும், அதனால், வீட்டுக்கு வரத் தாமதமாகும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் வீட்டுக்கே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு காவல்துறை பால சுப்ரமணியனைத் தேடத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஜே.பி.நகரில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் முதியவரின் சடலம் கிடப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலைக் கைப்பற்றி அது பாலசுப்ரமணியனின் உடல்தான் என்பதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இது தொடர்பாக பொலிசரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பால சுப்ரமணியனுக்கு அவருடைய வீட்டில் வேலை செய்யும் 35 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருந்திருக்கிறது. அதனால், அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணிடம் பொலிசார் விசாரித்தனர்.

அப்போது அந்த பெண், “கடந்த 16ஆம் திகதி வழக்கம் போலப் பாலசுப்ரமணியம் வீட்டுக்கு வந்தார். எப்போதும் போல நாங்கள் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென அவர் உணர்வற்றுக் கிடந்தார். உடனே என்ன செய்வது எனத் தெரியாமல், என்னுடைய கணவருக்கும், சகோதரனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தேன்.

இந்த செய்தி வெளியே தெரிந்தால், போலீஸார் என்னைக் கைது செய்துவிடுவார்கள் எனப் பயந்து போனேன். அதனால், அவர்கள் இருவரும் வந்தவுடன், அவருடைய உடலைப் பெரிய பொலிதீன் பையில் சுற்றி ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் வீசிவிட்டோம்“ எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது குறித்துப் பேசிய காவல்துறை, “இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உடலுறவின் போது மாரடைப்பால் அந்த முதியவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையின் விவரங்களுக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

Leave a Comment