இந்த நாட்டு மக்கள் வீதியில் இறங்குவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும், சண்டைப் பேச்சுக்களைக் கூறி மக்களின் உரிமைகளை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் .சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பொது மக்களின் போராட்டம் நியாயமானது எனவும், உண்மையான போராட்டத்தை குழப்ப வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இப்போராட்டத்தை ஜனாதிபதி குழப்பி வருவதாகவும், உண்மையான போராட்டக்காரர்களுடன் தாம் நின்று அவர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் செலவின தலையீடுகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை ங்விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1