27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு நிதி ஒதுக்கீடு நிறைவேறியது: தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு!

2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று (24) இடம்பெற்றது.

குழுநிலை விவாதத்தின் இறுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.

இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், வினோ நோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாணக்கியன் ராகுல ராஜபுத்திரன், த.கலையரசன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் எதிராக வாக்களித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்

east tamil

மின் வடங்கள் திருடப்படுவதை தடுக்க போக்குவரத்து அமைச்சின் தீர்மானம்

east tamil

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

Leave a Comment