காரில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டிய காரணத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல் துறை.
அண்மையில் பனையூரில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு அவர் வந்த காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளியுள்ளது. இந்தப் படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் கடந்த 20ஆம் திகதி சென்னை – பனையூரில் அமைந்துள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தன் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பு முடிந்த பிறகு அங்கிருந்து அவர் சென்றிருந்தார். அதனை ரசிகர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதில்தான் அவர் வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதனை கவனித்த பலரும் அதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். அதையடுத்து, போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.