24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இந்தியா

நடிகை பாவனா பலாத்கார பாணியில் மற்றொரு சம்பவம்: 19 வயது மொடல் அழகி காரில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்!

19 வயதான இளம் மொடல் அழகியொருவர், ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஓடும் காரில் பிரபல நடிகை பாவனாவை கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் நடிகையை பலாத்காரம் செய்ததாக கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தின் சூத்திரதாரியான நடிகர் திலீப்பும் கைதானார். இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொச்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கொச்சி, காக்கநாடு பகுதியில் தங்கி இருந்து மொடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை இவரது நண்பியொருவர் பொலிசாரை தொடர்பு கொண்டு, தனது தோழி பாலாத்காரம் செய்யப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் கொடுத்தார்.

அன்று காலைதான் உடல் முழுவதும் காயங்களுடன் மொடல் அழகி தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்தார். கொச்சி இன்போபார்க் பொலிசார், அவரிடம் வாக்குமூலத்தை பெற்ற பிறகு, அந்த பெண் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அத்துடன் விசாரணையையும் ஆரம்பித்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்த 21 வயதான மொடல் அழகி டிம்பிள் லாம்பா (டோலி)  கொச்சியில் தங்கியிருக்கிறார். அவர், பாதிக்கப்பட்ட மொடல் அழகியை வியாழன் தொடர்பு கொண்டு, டிஜே பார்ட்டிக்கு வருமாறு கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு இரவு பார்ட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். ராஜஸ்தான் அழகியின் 3 ஆண் நண்பர்களும் அந்த பார்ட்டிக்கு வந்துள்ளாரகள். எல்லாரும் சேர்ந்து பார்ட்டியில் மது அருந்தி உள்ளனர். பியரில் ஏதோ தூள் கலந்து அருந்த தந்ததாக பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணும், பார்ட்டியில் நடனம் ஆடினார்.

அவர் போதையேறியதும், பார்ட்டியிலிருந்து வெளியேற முயன்றார். அவர் தனியாக செல்ல வேண்டாமென்றும், 3 ஆண்களும் அவர் வீடு திரும்ப உதவுவார்கள் என கூறிய டிம்பிள், அவர்களின் காரில் ஏறும்படி, 19 வயது மொடல் அழகிக்கு கூறினார்.

அதை நம்பி, அவரும் காரில் ஏறினார். மொடல் அழகியை காரில் ஏற்றியபடி, நகரில் 45 நிமிடங்கள் வலம் வந்தனர். இந்த சமயத்தில், 3 பேரும் மாறி மாறி 19 வயதான மொடல் அழகியை வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளனர்.

பின்னர், பார்ட்டி நடந்த விடுதிக்கு வந்து, மொடல் டிம்பிளையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். காக்கநாடுக்கு சென்று, பாதிக்கப்பட்ட மொடலின் விடுதியின் முன் அவரை இறக்கி விட்டு சென்றனர்.

ராஜஸ்தான் மொடல் டிம்பிள், கொச்சியில் நடக்கும் இரவு பார்ட்டிகளில் வழக்கமான முகம் என பொலிசார் தெரிவித்தனர்.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், பாலியல் வல்லுறவு குற்றவாளிகளான கொடுங்கலூரைச் சேர்ந்த பி.எஸ்.விவேக் (26), சுதீப் (27), நிதின் (25) ஆகியோர் கைதாகினர்.

கொச்சியில் பார்ட்டிகளில் கலந்து கொண்டு, அவர்களிற்கு மொடல் டிம்பிள் அறிமுகமாகியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, கொடுங்கலூரில் இருந்து கொச்சிக்கு வந்த இளைஞர்கள் டிம்பிளை தொலைபேசி மூலம் அழைத்து பார்ட்டியில் பங்கேற்க விரும்புவதாகவும், அதற்கு பெண்கள் கிடைக்குமா என்று கேட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

எனவே, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட நடவடிக்கை இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கிரிமினல் சதி, பாலியல் வல்லறவு மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு. விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அவரது வேண்டுகோளின்படி பாதிக்கப்பட்ட பெண் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகள், மொடலும் அவரது நண்பரும் தங்கியிருந்த காக்கநாடு தகவல் பூங்காவில் உள்ள OYO அறையில் இருந்து தடயவியல் பரிசோதனைக்காக காவலில் வைக்கப்பட்டன.

தேவார அட்லாண்டிஸில் உள்ள ஹொட்டலின் நடன அரங்கிற்கு போலீசார் சீல் வைத்தனர். ஹொட்டல் மற்றும் வாகனம் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டன. வாகனத்தில் தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

காசர்கோட்டைச் சேர்ந்த மொடல் அழகி, சிறுமியாக இருந்த போதே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். கணவர் மீது போக்சோ வழக்கும், அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கொச்சியில் தங்கியிருந்து மொடலிங் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். OTT தளத்தில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.

பி.எஸ்.விவேக், சுதீப், நிதின், டிம்பிள் லம்பா ஆகியோர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காரின் உரிமையாளரான விவேக், ஏவியேஷன் படிப்பு படித்துவிட்டு வளைகுடா நாட்டில் உள்ள விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சுதீப் பிடெக் முடித்தவர், நிதின் டிரைவராக உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment