பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இன்று (14) ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்கவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், பொது மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் சுயேச்சையாக நிற்க முடிவெடுத்ததாகவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோபுள்ளே தனது மனசாட்சிக்கு எப்பொழுதும் உண்மையாகவே செயற்பட்டதாகவும், ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் மக்கள் நட்பு முன்மொழிவுகளை ஆதரிப்பதற்கும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதும் திட்டங்களை நிராகரிப்பதற்கும் தயங்குவதில்லை.
2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்படும் வேளையில், எதிர்க்கட்சி என்ற வகையில் பொதுமக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய பொதுவான நோக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை இன்று (14) சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தாம் கூட்டணியுடன் கைகோர்க்கவில்லை என தெரிவித்த அவர்., தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக வெளியான செய்திகள் பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்தார்.