28.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil
உலகம்

தென்கிழக்காசியாவில் புதிய பனிப்போர் நிலைமையை உருவாக்கக்கூடாது: இந்தோனேசிய

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்ற சக்திகளுக்குப் பினாமியாக இருக்கக் கூடாது என்றும், புவிசார் அரசியல் அழுத்தங்கள் புதிய பனிப்போரை உருவாக்க அனுமதிப்பதை எதிர்க்க வேண்டும் என்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) தலைவர் பதவியை இந்தோனேஷியா ஏற்றுக்கொண்டது. பத்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

சீனாவும் அமெரிக்காவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் செல்வாக்கிற்காக போட்டியிடுவதால், பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் விடோடோ தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், இந்த கொள்ளை விளக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் தலைமையை கடந்த ஒரு வருடமாக கம்போடியா வகித்தது. இன்று தலைநகர் புனோம் பென்னில் நடந்த ஒப்படைப்பு விழாவில் புதிய தலைமை இந்தோனேஷியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விடோடோ பேசுகையில், “ஆசியான் ஒரு அமைதியான பிராந்தியமாகவும், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கான நங்கூரமாகவும் மாற வேண்டும், சர்வதேச சட்டத்தை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும், எந்த சக்திகளுக்கும் பினாமியாக இருக்கக்கூடாது.”

“ஆசியான் ஒரு கண்ணியமான பிராந்தியமாக இருக்க வேண்டும், மனிதநேயம் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த வேண்டும். ஆசியான் தற்போதைய புவிசார் அரசியல் இயக்கவியல் நமது பிராந்தியத்தில் ஒரு புதிய பனிப்போராக மாற அனுமதிக்கக் கூடாது,” என்று அவர் அறிவித்தார்.

ஆசியான் தலைவர்கள் மற்றும் பிராந்திய உரையாடல் பங்காளிகளுக்கு இடையிலான வருடாந்திர சுற்று உச்சிமாநாடுகளின் முடிவில் இந்த சுருக்கமான விழா நடைபெற்றது.

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!