மருத்துவத்துறை சார்ந்த உங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் எழுதி அனுப்புங்கள். தமிழ் பக்கத்தின் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ (0766722218) அல்லது pagetamilmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
பெயர் குறிப்பிடாத வாசகி (24)
வல்வெட்டித்துறை
நான் வெள்ளை நிறமானவள். எனக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. சில காலமாக எனக்கு சுயஇன்பப் பழக்கம் உள்ளது. எனது பெண் உறுப்பு கருப்பாக உள்ளது. சுயஇன்பம் அனுபவிக்கும் போது தடவிக் கொடுத்ததால் அப்படி நிறம் மாறியதா? எனக்கு பயமாக உள்ளது. மணமகன் அதை கண்டுபிடித்து விடுவாரா? அண்மையில் சில போர்ன் படங்கள் பார்த்தேன். அதிலுள்ள பெண்களின் பிறப்புறுப்புக்கள் வேறு மாதிரியும், எனது உறுப்பு வேறு மாதிரியும் உள்ளதாக குழப்பம் அடைகிறேன்.
டாக்டர் ஞானப்பழம்:
அன்பாக தங்கையே, நீங்கள் குழப்பம் அடைய வேண்டியதே இல்லை. இயற்கை பல வேறுபாடுகளைக்கொண்டதுதான். இரண்டு நபர்கள் ஒரே மாதிரி இருப்பது இல்லை. உங்களுக்குப் பெரும் வேறுபாடு இருப்பதுபோல தோன்றினால் ஒரு தொடர்புடைய மருத்துவரை அணுகிக் குழப்பத்தைப் போக்கிக்கொள்ளுங்கள்.
வெள்ளையான நிறமுடையவர்களிற்கு பெண் உறுப்பு கருப்பாக இருப்பது ஆச்சரியமல்ல. சுற்றி தோல் நிறமிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம். வேறு தோல் நோயாக இருக்கக்கூடும் என, நீங்கள் நினைத்தால் தோல் மருத்துவரை அணுகவும்.
பெண் உறுப்பை தேய்த்துக் கொடுப்பதால் கருப்பாகி விட்டதாக தகறாக கற்பனை செய்ய வேண்டாம். நீங்கள் அப்படி செய்யாவிட்டாலும், பெண் உறுப்பு கருப்பாகவே இருக்கும்.
நிதர்சன் (31)
மருதங்கேணி
உடலுறவின்போது கிளிடோரியஸின் பங்கு என்ன?. உடலுறவின்போது கிளிடோரியஸைத் தனிப்பட்ட முறையில் தூண்டிவிடுவது அவசியமா?
டாக்டர் ஞானப்பழம்:
கிளிடோரியஸ் என்பது ஆணுடைய பாலுறுப்பின் ‘மினியேச்சர் வடிவம்’ என்று சொல்லலாம். அதில் நிறைய உணர்வு நரம்புகள் உள்ளன. அது இன்பத் தூண்டலைக் கடத்துகிறது. உடலுறவுகொள்ளும்போது, கிளிடோரியஸ் பகுதி, தேய்த்துக் கொடுக்கப்படுகிறது. யோனிக்குள் ஆணுறுப்பு நுழைந்து மேலும் கீழுமாக அசைந்து அழுத்தும் சமயத்தில், சீராக உச்சநிலையை எட்டுவதற்கு உதவி செய்கிறது.
நேரடியாக கிளிடோரியஸைத் தூண்டிவிடுவது அவசியம் இல்லை. உடலுறவின்போது, ஆணுறுப்பு நேரடியாக கிளிடோரியஸைத் தொடுவது இல்லை. யோனியின் உட்புற உதடுகளான லேபியா மைனோராவை ஆணுறுப்பு இழைந்துகொடுப்பதே போதுமானதாக இருக்கிறது.
மேலுமொரு தகவல்,
சில ஆபிரிக்க மக்கள் குழுக்களிடமும் அபிசினியாவிலும் பெண்கள் பூப்படையும் நேரத்தில் கிளிடோரியஸை அகற்றிவிடும் பழக்கம் இருக்கிறது. பெண்களின் செக்ஸ் மோகத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இதை, ‘கிளிடோரிடெக்டமி’ என்கிறோம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெண்களின் சுய இன்ப இச்சையைத் தண்டிக்கும் விதமாக, கிளிடோரியஸை அகற்றும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
எல்.சாருஜன் (21)
செம்மலை
சுயஇன்பம் அனுபவிப்பது தவறா? இதனால் இரத்தம் வீணாகி உடல் பலவீனமடையும் என்பது உண்மையா?
டாக்டர் ஞானப்பழம்:
தவறு இல்லை. பசியைப் போல பாலுணர்வுத் தூண்டலும் இயற்கையானதுதான். அதைத் தீர்த்துக்கொள்ள அறிமுகம் இல்லாத பெண்களை நாடிச் செல்லும்போது, பால்வினை நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு, வாழ்க்கையைத் தொலைப்பதற்குப் பதிலாக, சுய இன்பத்தின் மூலம், அந்த வேட்கையைத் தணித்துக்கொள்வதில் தவறு இல்லை. நாமாக சுய இன்பத்தில் ஈடுபடவில்லை என்றாலும், உறங்கும்போது தானாகவே விந்து வெளியேற்றம் நடந்திடவும் வாய்ப்பு உள்ளது.
திருமண வயது (பாலியல் தேவை) என்பது 18 வயதிலேயே தொடங்கிவிடுகிறது. ஆனால், அந்த வயதில் திருமணங்கள் நடப்பது இல்லை. படிக்க வேண்டும், நல்ல வேலை வேண்டும் எனக் காலம் நம்மை விரட்டுகிறது. சமூகச் சூழல் நம்மை இந்த நிலைக்குத் தள்ளியிருப்பது, நம் உடலுக்குத் தெரியாது. அது இனப் பெருக்கத்துக்குத் தயாராகி நிற்கிறது. இதுதான் இன்றைய பிரச்னை.
இதற்கு ஒரே வடிகாலாக இருப்பது, சுய இன்பம் மட்டும்தான். இதைத்தான் டீன்ஏஜ் இளைஞர்கள் செய்கிறார்கள். சுய இன்பம் என்பது, ஒரு சமுதாயக் காரணம். ஒரு காலத்தில், வயதுக்கு வருவதற்கு முன்பே, திருமணம் செய்துவிடும் நிலைமை இருந்தது. கால மாற்றத்தில் அந்த வழக்கமும் மாறிப்போனது.
இந்த நிலைமை நீடிக்கும் வரை சுய இன்பத்தைத் தடுக்க முடியாது. இளமை இருக்கும்போதே திருமண வாழ்வில் ஈடுபட்டு இன்பம் அனுபவிப்பதுதான் இதற்கு ஒரே வழி.
100 சொட்டு இரத்தம் சேர்ந்து, ஒரு சொட்டு விந்துவாக உருவாகும் என, சில லேகிய விற்பனையாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அதில் உண்மை இல்லை. நாம் சாப்பிடும் உணவுகள் சிறு மூலக்கூறுகளாக மாறி செரிமானம் ஆகின்றன. இந்த மூலக்கூறுகள் இரத்த நாளங்கள் வழியாக உடலின் பல பாகங்களுக்கும் சென்று, சக்தியை அளிக்கின்றன. சரியாக சக்தி கிடைத்த உறுப்புகள், ஒழுங்காகச் செயல்படும். அப்படி விதைப்பைகளுக்குக் கிடைக்கும் சக்தியானது, அங்குள்ள சுரப்பிகளைச் செயல்படவைக்கிறது. விந்து சுரப்பதும் இப்படித்தான். இதற்கும் இரத்தத்தின் அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்காகத் தனியாக உணவு உண்ண வேண்டியதும் இல்லை.
ம.மெய்யப்பன் (28)
வலப்பனை
எனக்கு அண்மையில் திருமணம் நடந்தது. பெரியோர் நிச்சயித்த திருமணம். மனைவிக்கு மார்பகம் சிறியதாக உள்ளது. அவர் செக்ஸில் சற்று நாட்டம் குறைந்தவர் போலுள்ளார். சிறிய மார்பகம் இருக்கும் பெண்கள் செக்ஸில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்களா?
டாக்டர் ஞானப்பழம்:
இதில் உண்மை இல்லை. செக்ஸ் நாட்டம் என்பது, எப்படி வளர்க்கப்படுகிறோம், குடும்பச் சூழல், செக்ஸ் பற்றிய அவர்களின் புரிதல் ஆகியவற்றைப் பொறுத்தது. உங்கள் மனைவிக்கு தயக்கம் இருக்கலாம். தற்போதைய வீட்டுச்சூழல் அவரை தடுக்கலாம். அவற்றை மனம்விட்டு பேசிக்கொள்ளுங்கள்.