பளை பகுதியில் இன்று (09) ஹெரோயின் போதைபொருளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பகுதியில் ஹெரோயின் பாவனை இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த போது 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் தர்மபுர மற்றும் பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் நாளை (10) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1