மருத்துவத்துறை சார்ந்த உங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் எழுதி அனுப்புங்கள். தமிழ் பக்கத்தின் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ (0766722218) அல்லது pagetamilmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
எஸ்.ரகுராம் (28)
வந்தாறுமூலை
நான் தனியார் நிறுவனமொன்றின் விற்பனை முகாமைத்துவ பிரிவில் பணிபுரிகிறேன். எனக்கு பல வருடங்களாக சுய இன்ப பழக்கம் உள்ளது. கைகளில் நடுக்கம் உள்ளது. சுயஇன்ப பழக்கத்தினால் கைநடுக்கம் ஏற்படுமென்றும், அதனால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதென்றும் அறிகிறேன். எனக்கு இப்பொழுது பெற்றோர் திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? அதிக சுய இன்பம் பாதிப்பை ஏற்படுத்துமா? பெண்களும் சுய இன்பம் அனுபவிப்பார்கள் தானே? ஒருவேளை மனைவிக்கும் அப்படியான பழக்கங்கள் இருந்திருந்தால் அதை எப்படி கண்டறிவது?
டாக்டர் ஞானப்பழம்:
ரகுராம், நீங்கள் பயப்படும் விதமாக எதுவுமே இல்லை. முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் நரம்புகள் பழுதாகிவிட்டனவா? திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைத்தான்.
சுயஇன்பம் என்ற ஆங்கில வார்த்தையை ‘மாஸ்ட்டர்பேஷன்’ என்பர். சுயஇன்பம் என்பது செக்ஸ் ஆர்கனைத் தூண்டி, மகிழ்ச்சியை அனுபவிப்பது. பாலியல் தொடர்பான பெரும்பாலான தகவல்கள், செவி வழிச் செய்திகளால் தவறான வக்கிர உணர்வைத் தூண்டும் புத்தகங்களால், மூட நம்பிக்கைகளால் ஆனவை. உலகில் இல்லாத பாவத்தைச் செய்துவிட்டது போல் சம்பந்தப்பட்ட ஆணையும் பெண்ணையும் குற்ற உணர்வில் ஆழ்த்துவதற்கு அதுதான் காரணம்.
‘உலகில் 95 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்கள்தான். மீதம் ஐந்து சதவிகிதம் பேர் பொய் சொல்கிறார்கள்’ என்று புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. ஏறத்தாழ எல்லோரும் சுய இன்பப் பிரியர்கள்தான்.
உங்கள் நீண்ட கடிதம் படித்தேன். நீங்கள் பயப்படுவதைப் பார்த்தால், உலகில் உள்ள அனைவரும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். அதனால், உங்கள் சுயஇன்பத்தால் நரம்புகள் தளர்ந்துவிட்டதாகப் பயப்படத் தேவை இல்லை. கண்ட கண்ட புத்தகங்களைப் படித்துவிட்டு, போலி வைத்தியர்களின் அறிவுரை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.
கை நடுக்கம் ஏற்படுவதற்கு கல்சியம் பற்றாக்குறை, மனநோய், நரம்பியல் நோய்கள் போன்றவை காரணமாக இருக்கலாம். நிச்சயமாக சுய இன்பம் அனுபவிப்பது காரணம் அல்ல.
ரகுராம் அதிகப்படியான சுயஇன்பம் பாதிப்பா என கேட்டிருக்கிறீர்கள்.
அதிகப்படியான என்பதற்கு என்ன அளவு எனத் தெரியவில்லை. சுய இன்பம் அனுபவிப்பதில் அதிகப்படி என்ன இருக்கிறது? வாரத்தில் ஒரு தடவையா, ஒரு நாளுக்கு ஒருதடவையா? இதை அதிகப்படி என அளப்பதற்கு கருவி ஒன்றும் இல்லை. இதில், விரும்பி இன்பம் அனுபவிப்பது அல்லது பழக்கம் காரணமாக ஈடுபடுவது என இரண்டு வகை உண்டு. எதுவாக இருப்பினும் தீங்கு விளைவது இல்லை.
ரகுராம் உங்கள் சந்தேகங்களிற்கு தீர்வு கிடைத்திருக்குமென நம்புகிறேன். அதனால் தயக்கமின்றி திருமணம் செய்யுங்கள்.
ஆனால், உங்கள் மனைவி சுயஇன்பம் அனுபவித்தவரா என என்னைக் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வது?
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு இந்த விபரீத ஆராய்ச்சிகளில் இறங்காதீர்கள். நீங்கள் சுயஇன்பத்தை அனுபவித்ததை போல, உங்கள் வருங்கால மனைவியும் அனுபவித்திருக்கலாம். ஏனெனில், ஆண்களை போலவே பெண்களும் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். கிளிடோரியஸைத் தேய்த்துக்கொடுப்பது, சில பெண்கள் தொடைகளுக்கு இடையே துணிகளையோ, தலையணையையோ வைத்து தேய்த்துக்கொள்வர். வெகு சிலர் வைபரேட்டர், டில்டோ போன்ற பிரத்யேக உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர்.
திருமணத்துக்கு முன் சுயஇன்பத்தால் உச்சநிலையை எட்டி இன்பம் துய்த்த பெண்கள், தங்கள் இணையுடன் அந்த சுகத்தை அடைய முடியாமல் ஏமாறுவது உண்டு. இணையுடன் இன்பம் துய்ப்பது என்பது சம்பந்தப்பட்ட இருவரின் மனநிலை, செக்ஸ் முன் விளையாட்டு போன்றவற்றோடு் தொடர்புடையது.
மி.டினோஷா (24)
வத்தளை
கடந்த பகுதிகளில் பெண்கள் கொண்டம் அணிவது பற்றி சொல்லியிருந்தீர்கள். அது பற்றிய தகவல் வேண்டும். ஆண்களுக்கான கொண்டத்தைப் பெண்கள் பயன்படுத்தலாமா?
டாக்டர் ஞானப்பழம்:
ஆணுறையைப் பெண்கள் பயன்படுத்த முடியாது. தற்போது, பெண்களுக்கான பிரத்தியேக கொண்டம் கடைகளில் கிடைக்கின்றன. இந்த கொண்டமும் ஆணுறைப்போன்ற வடிவமைப்பு, வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது. இது பொலியுரித்தனால் (Polyurethane) ஆனது. 15 செ.மீ நீளம், 5 செ.மீ சுற்றுவட்டம் கொண்டது. இதன் இருபுறத்திலும் வளையம்போன்ற அமைப்பு இருக்கிறது. இதில், சிறிய வளையமானது பெண்ணுறுப்பினுள் வைக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டது. இது செர்விஸ் பகுதியில் ஃபிட் ஆகும். மற்றொரு வளையம் வெளியே இருக்கும். இது இந்த கொண்டம் விலகிவிடாமல் இருக்க உதவுகிறது.
இந்த முறையில் 2 முதல் 30 சதவிகிதம் தோல்வியடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. இதன் செயல்திறன் என்பது தம்பதிகளின் நடத்தை செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.
சீரற்ற மாதவிலக்கு உள்ள பெண்கள் மத்தியிலேயே இதன் தோல்வி விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களில் வெறும் எட்டு சதவிகிதம் பேருக்குத்தான் சீரான மாதவிலக்கு வருகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டியது முக்கியம். அதேபோல, பாலூட்டும் காலத்தில் மாதசுழற்சியைக் கணக்கிடுவதும் கடினமானது.
தனஞ்ஜயன் (30)
பொகவந்தலாவை
எனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகிறது. பேச்சு திருமணம். மனதிற்குள் ஒரு பிரச்சனை தொடர்ந்து குடைந்து கொண்டிருக்கிறது. முதலிரவில் மனைவி கூச்சமின்றி சகஜமாக நடந்து கொண்டார். மறுநாள் காலையில் படுக்கை விரிப்பை கவனித்தேன். இரத்த துளிகள் இருக்கவில்லை. பெண்கள் முதன்முறை உடலுறவு கொள்ளும் போது, இரத்தம் சொட்டும் என அறிந்திருக்கிறேன். இந்த சம்பவத்தின் பின் மனதிற்குள் ஒரு குடைச்சல் இருந்து கொண்டேயிருக்கிறது. இப்போது நான் என்ன முடிவெடுக்க வேண்டும்?
டாக்டர் ஞானப்பழம்:
இப்போதல்ல, இப்படியான நிலைமைகள் வரும் போதெல்லாம் ஆண்கள் எப்போதுமே ஒரேயொரு முடிவுதான் எடுக்க வேண்டும். அதாவது, கண்டகண்ட பிரசுரங்களையெல்லாம் படித்து விட்டு, இப்படி தேவையற்ற விதமாக சிந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் கன்னிச் சவ்வு எனப்படும் ஹைமென் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டால் இந்த சந்தேகங்கள் வராது. தனஞ்ஜயனுக்கு கண்ட கண்ட புத்தகங்களைப் படித்து ஒரு மாதிரி மைண்ட் செட் ஏற்பட்டு விட்டது. கன்னிச் சவ்வு என்பது யோனியை முழுசாக ஒரு ஸ்கிரீன் மாதிரி மூடியிருக்கும் என நினைக்கிறீர்கள். அப்படி அல்ல. அது யோனியின் உட்புற வாய்ப் பகுதியில் வட்டமான சிறிய ஓட்டையுடன் இருக்கும். அந்தச் சவ்வு மெல்லியதானது. மாதவிடாய் ரத்தப் போக்கு இந்த ஓட்டையின் வழியாகத்தான் நடக்கும்.
பெண் முதன் முதலாக உடலுறவில் ஈடுபடும்போது, விறைப்பான ஆணுறுப்பு உள்ளே செலுத்துப்படுவதால் இந்தக் கன்னிச் சவ்வு விரிவடைகிறது, அல்லது கிழிகிறது. இதனால் சில துளி ரத்தம் வெளியேறும். ஆனால் கண்டிப்பாக உடலுறவின் போதுதான் இது நிகழ வேண்டும் என்பது இல்லை. அந்த மெல்லிய சவ்வு விளையாடும்போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ, தாண்டிக் குதிக்கும்போதோ, ஏதேனும் காயம் ஏற்பட்டோ கிழிபடலாம்.
அதிர்வுக் கருவிகள், மெழுகுவத்தி போன்ற பொருட்களைவைத்து சுய இன்பத்தில் ஈடுபடும்போது கன்னிச் சவ்வு பாதிக்கப்படலாம்.
நம்முடைய பாரம்பர்ய மதிப்பீடுகள், பெண்ணின் கன்னித் தன்மையை, பெண் புகுந்த விட்டுக்குக் கொண்டு செல்லும் பொக்கிஷம் என வலியுறுத்துகின்றன. ஆனால், அதற்காக அதைக் கன்னிச் சவ்வு கிழிதலோடு தொடர்புபடுத்தி சந்தேகிப்பது தேவையற்றது. ஆரம்பக்காலங்களில் பெண்ணின் கற்பு என்பது அவளுடைய உடலோடு சம்பந்தப்பட்டதாக இல்லை. மாறாக சமூக, உளவியல் காரணங்களுக்காக எந்த ஆணுடனோ, ஆண்களுடனோ இணைந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. பின் நாட்களில் ஏற்பட்ட திருமண உறவுகள், ஒரு பெண்ணை தனக்கு மட்டுமே உரியவள் என்ற மனப்போக்கு ஆட்படுத்தியது. ஒரு பெண் தன் கற்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அதற்கான ஏராளமான சம்பிரதாயங்களும் ஏற்பட்டன. எது எப்படியோ, கன்னிச் சவ்வு கிழிந்திருப்பதால் ஒரு பெண் கன்னித்தன்மை அற்றவள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடலுறவின்போது கன்னிச்சவ்வு கிழிபடும்போது வெளியேறும் ரத்தத்தின் அளவு, பெண்ணுக்குப் பெண் வேறுபடும். சவ்வின் தடிமன், சவ்வில் இருக்கும் ரத்த நாளங்களின் எண்ணிக்கை, சேர்க்கையின்போது ஆணுறுப்பின் மூலம் செயல்படும் மூர்க்கம்… இவற்றைப் பொறுத்தும் ரத்த இழப்பின் அளவு மாறுபடும்.
பொதுவாக, ரத்த இழப்பு சில துளிகள் இருக்கும்.